Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யா உக்ரேன் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டால் அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும்: நிபுணர்கள்

வாசிப்புநேரம் -

உக்ரேன் மீது ரஷ்யா அணுவாயுதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டால் அமெரிக்காவுக்கு நிச்சயமாக அதுபற்றி முன்கூட்டியே தெரியவரும் என்று அணுவாயுத நிபுணர்கள் கூறியுள்ளனர். 

அதேவேளையில் மாஸ்கோ அதன் அணுவாயுதத் தாக்குதல் திட்டங்கள் பற்றிப் பிறருக்குத் தெரியவைக்க விரும்பும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். 

உக்ரேனின் 4 வட்டாரங்களைக் கைப்பற்றி அவற்றை ரஷ்யா அதனுடன் நேற்று அதிகாரபூர்வமாக இணைத்திருக்கிறது. 

அதன் தொடர்பில் எழும் தாக்குதல்களை எதிர்கொள்ள ரஷ்யா அணுவாயுதத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது. 

ரஷ்யா கைப்பற்றிய உக்ரேனின் நிலம் குறித்து மிரட்டல்கள் உருவெடுத்தால் அதை எதிர்கொள்ள மாஸ்கோ அணுவாயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நிலை ஏற்பட்டால், சிறிய அணுவாயுதங்கள், குறுகிய தூரத்துக்குச் செல்லக்கூடிய Iskander வகைப் புவியீர்ப்பு ஏவுகணையின் மூலம் பாய்ச்சப்படக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 

இந்நிலையில் மாஸ்கோவின் மிரட்டல்கள் சிறிய அளவில் மட்டுமே உள்ளன என்று ராணுவ ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.  

மாஸ்கோ அணுவாயுதத் தாக்குதல் நடத்துவது குறித்துத் திட்டமிடுவதற்கான அறிகுறிகள் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகளும் கூறுகின்றனர். 

இதற்கிடையே மேற்கத்தியத் தற்காப்பு, உளவுத்துறை அமைப்புகள் நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்