Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Coldplay இசை நிகழ்ச்சியின் நுழைவுச்சீட்டு விலை $1,000? விசாரிக்கும் இந்தியக் காவல்துறை

வாசிப்புநேரம் -
இந்தியாவில் நடைபெறவிருக்கும் பிரிட்டிஷ் இசைக்குழு Coldplay-யின் இசை நிகழ்ச்சி பல ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சிலர் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கி இணையத்தில் அவற்றை 1,000 டாலருக்குமேல் விற்பனை செய்கின்றனர்.

அதனால் காவல்துறை அத்தகைய சம்பவங்களை விசாரணை செய்வதாக South China Morning Post செய்தித்தளம் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் மும்பையில் உள்ள நிதி நடுவத்தில் 3 இசைநிகழ்ச்சிகளை Coldplay நடத்தவிருக்கிறது.

இந்திய இணைய நுழைவுச்சீட்டுத் தளமான BookMyShow இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்கிறது.

3 இசை நிகழ்ச்சிகளுக்குமான நுழைவுச்சீட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுமுடிந்தன.

மறுவிற்பனைப் பக்கங்களில் நுழைவுச்சீட்டுகள் 10, 20, 30 மடங்கு அதிகமாக விற்கப்படுவதாக ரசிகர்கள் கூறினர்.

BookMyShow தளத்தின் தலைமைச் செயலாக்க அதிகாரியைக் காவல்துறை விசாரணை செய்கிறது.

பலர் தளத்தைப் பற்றிக் குறைகூறியவுடன் அது கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதிகாரம் இல்லாத நுழைவுச்சீட்டுத் தளங்களுக்கும் BookMyShow தளத்திற்கும் தொடர்பில்லை என்று அதில் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்