Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் - தெரிந்துகொள்ளவேண்டியவை

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தல் -  தெரிந்துகொள்ளவேண்டியவை

Reuters

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

அது குறித்துச் சில தகவல்களைத் திரட்டியது 'செய்தி'.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் முன்னர் ஆதரவளித்த கட்சிக்குத்தான் பெரும்பாலான மாநிலங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.

ஆனால் 'Swing States'இல் நிலவரம் வேறு.

🗳️ 'Swing States' என்றால்?

தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களுக்குமே ஆதரவு சமநிலையாக கிடைக்கும் மாநிலங்கள் 'Swing
States' என்றழைக்கப்படுகின்றன.

மொத்தம் 7 'Swing States' உள்ளன.
  • ஜார்ஜியா
  • நார்த் கரோலைனா
  • பென்சில்வேனியா
  • விஸ்கோன்சின்
  • மிச்சிகன்
  • நெவாடா
  • அரிஸோனா
🗳️ அதிபர் மன்ற வாக்குகள் (electoral college votes) என்றால்?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுகள் மக்கள் அளிக்கும் ஒட்டுமொத்த வாக்குகளின் மூலம் தீர்மானிக்கப்படுவதில்லை.

அதிபர் மன்ற முறையின்கீழ் தனிப்பட்ட மாநிலங்களின் வாக்குகளே தேர்தல் முடிவை நிர்ணயிக்கும்.

மொத்தம் 538 அதிபர் மன்ற வாக்குகள் உள்ளன.

வெற்றிபெறுவதற்கு வேட்பாளர் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறவேண்டும்.

'Swing States'இல் மொத்தம் 93 அதிபர் மன்ற வாக்குகள் உண்டு.

🗳️ ஒருவேளை இரு வேட்பாளர்களும் சமநிலையில் 269 அதிப மன்ற வாக்குகளைப் பெற்றால்....

அமெரிக்க மக்களவை அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும்.

அதனைத் தொடர்ந்து செனட் சபை துணையதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும்.

🗳️ ஹாரிஸுக்கு முக்கியமான மாநிலம்....
  • பென்சில்வேனியா
    அங்கு 19 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற வாய்ப்புண்டு. அங்கு வெற்றி கண்டால், இரு வேட்பாளர்களுக்கிடையே உள்ள போட்டி கடுமையாகும்.

🗳️ டிரம்ப்புக்கு முக்கியமான மாநிலம்....
  • நார்த் கரோலைனா
    கடந்த இரு தேர்தல்களில் டிரம்ப், நார்த் கரோலைனா மாநிலத்தைக் கைப்பற்றினார். ஒருவேளை அங்குள்ள கறுப்பின வாக்காளர்கள் 2008ஆம் ஆண்டில் பராக் ஒபாமாவுக்கு ஆதரவளித்தது போல் ஹாரிஸுக்கும் இம்முறை ஆதரவளித்தால், டிரம்ப் வெற்றிபெறுவது சற்றுக் கடினமாகும் என்று கூறப்படுகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்