Skip to main content
குடும்பத் தகராறு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

குடும்பத் தகராறு - 6 பேர் கொலை

வாசிப்புநேரம் -
குடும்பத் தகராறு - 6 பேர் கொலை

(படம்: Envato Elements)

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்குக் குடும்பத் தகராறு காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறை தெரிவித்தது.

தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபரும் தன்னை தானே சுட்டுக்கொண்டு மாண்டார்.

உயிரிழந்த அனைவரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது.

சந்தேக நபர் 52 வயது ராயன் வில்லிஸ் மெக்ஃபர்லன்ட் (Ryan Willis McFarland) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மஸ்கடின் (Muscatine) நகரின் வெவ்வேறு பகுதியில் தாக்குதல்கள் நடந்தன.

ஒரு வீட்டில் 4 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

நால்வரும் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது மெக்ஃபர்லன்ட் வீட்டில் இல்லை.

பின்னர் அவர் சிறிய பாலத்திற்கு அருகே மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

வேறொரு வீட்டிலும் ஒரு வர்த்தகத்திலும் மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்