Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா - ஈரான் கைதிகள் பரிமாற்றம் - அரிய நிகழ்வு

வாசிப்புநேரம் -
அமெரிக்கா - ஈரான் கைதிகள் பரிமாற்றம் - அரிய நிகழ்வு

(படம்: Karim JAAFAR / AFP)

ஈரானிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள் ஐவர் கத்தார் சென்று சேர்ந்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த அவர்களில் ஒருவர் 8 ஆண்டுகளாக ஈரானில் சிறையில் இருந்தவர்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விடுதலை சாத்தியமானது.

வாஷிங்டனும் ஈரானியக் கைதிகள் ஐவரை விடுதலை செய்துள்ளது. இது ஓர் அரிய நிகழ்வு என்று கூறப்படுகிறது.

உடன்பாட்டின்படி, ஈரானின் நிபந்தனைக்கு ஏற்ப 6 பில்லியன் டாலர் நிதியையும் அமெரிக்கா விடுவித்துள்ளது.

ஈரானுக்குப் பிணைத்தொகையாக அதைக் கொடுக்கவில்லை என்றும் அந்தப் பணம் ஈரானின் மனிதாபிமானச் செயல்களுக்கு உதவும் என்றும் பைடன் நிர்வாகம் கூறியது.

அவ்வாறு செய்யப்படவில்லை என்றால் பணம் மீண்டும் முடக்கப்படும் என்றும் அமெரிக்கா சொன்னது.

ஆனால் பணம் ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அது ஈரானிய மக்களுக்குச் சொந்தமானது என்றும் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரயிசி (Ebrahim Raisi) குறிப்பிட்டார்.

இதுவரை அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணம் இனி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்