சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளில் சீனாவுக்கு எதிராகச் செயல்பட அமெரிக்கா-ஜப்பான் உறுதி

படம்: AFP PHOTO / JIJI PRESS / Japan's Cabinet Public Relations Office
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடாவும் (Fumio Kishida), சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலிலும், கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட சூளுரைத்துள்ளனர்.
காணொளி வழியாகச் சந்தித்த இருவரும், தைவானிய நீரிணையில் அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தினர்.
சீனா உரிமை கோரிவரும் செங்காக்கு (Senkaku) தீவுகள் விவகாரத்தில் ஜப்பானைத் தற்காக்க அமெரிக்கா கடப்பாடு தெரிவித்தது.
அமெரிக்க-ஜப்பான் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாகத் திரு.பைடன் குறிப்பிட்டார்.
திரு. கிஷிடா பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் முக்கிய சந்திப்பாக இந்த காணொளிச் சந்திப்பு கருதப்படுகிறது.