Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மார் ராணுவ அரசாங்கம் மீது அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூடுதல் தடைகள்

வாசிப்புநேரம் -
மியன்மாரின் ராணுவ அரசாங்கம் மீது கூடுதலான தடைகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

மியன்மார் ராணுவம் அதன் வருவாயைப் பெருக்குவதை புதிய தடைகள் சிரமமாக்கும்.

ராணுவச் சாதனங்களை வாங்கவிடாமல் அவை தடுக்கும் என்று அமைச்சின் ஆலோசகர் டெரிக் ஷோலே கூறினார்.

இதுவரை 80 தனிநபர்கள், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

ஆனால் வட்டார அமைப்பான ஆசியான், மியன்மார் மீது தடைகளை விதிக்கவும் மியன்மாரை ஆசியானிலிருந்து நீக்கவும் தயக்கம் காட்டுகிறது.

ஆசியான் கூட்டங்களில் மியன்மாரின் ராணுவம் பங்கேற்பதைத் தடைசெய்யும்படி அமெரிக்கப் பேராளர் கேட்டுக்கொண்டார்.

ராணுவ ஆட்சி தொடரும் வரை மக்கள் அவதியுறுவர் என்று அவர் சொன்னார்.

மியன்மாரின் நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும் என்றால் அதன் ராணுவ அரசாங்கத்திற்கு ரஷ்யா ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று திரு. ஷோலே குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்