Skip to main content
இந்தியாவின் சமோலி சுரங்கத்தில் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவின் சமோலி சுரங்கத்தில் விபத்து - 6 ஊழியர்கள் மரணம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் சமோலி சுரங்கத்தில் விபத்து - 6 ஊழியர்கள் மரணம்

(கோப்புப் படம்: Unsplash/Redd Francisco)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கத்தில் தண்ணீரும் சேறும் புகுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

சம்பவத்தில் 6 ஊழியர்கள் மாண்டனர். 14 பேர் காயமுற்றனர்.

நேற்று (13 ஆகஸ்ட்) இரவு சம்பவம் நடந்தது.

விபத்து நடந்தபோது சுரங்கத்திற்குள் 22 ஊழியர்கள் இருந்தனர்.

இன்னும் இரண்டு ஊழியர்களின் நிலை குறித்து உடனடியாகத் தகவல் தெரியவில்லை.

இந்திய ராணுவமும் காவல்துறையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

சமோலி பகுதியில் கடந்த சில நாளாகப் பெய்த மழையால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கார் சிங் தாமி (Pushkar Singh Dhami) சம்பவம் குறித்து அக்கறை தெரிவித்தார்.

போர் காலத்தில் இருப்பது போன்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சுரங்கத்தில் சிக்கியிருக்கும் ஒவ்வோர் ஊழியரையும் பாதுக்காப்பாக மீட்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்றார் அவர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்