Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் 5 வயது வரையிலான பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்புமருந்து - அனுமதி நாடும் Pfizer-BioNTech

வாசிப்புநேரம் -

Pfizer-BioNTech மருந்தாக்க நிறுவனங்கள், அமெரிக்காவில் பிள்ளைகளுக்கான தடுப்புமருந்தின் பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு, மருந்து ஆணையத்தின் (FDA) அனுமதியை நாடி அதிகாரத்துவக் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளன.

அதற்கான அனுமதி வழங்கப்பட்டால், 6 மாதக் குழந்தைகள் முதல் 5 வயதுப் பிள்ளைகள் வரை கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

கோரிக்கை குறித்துப் பரிசீலனை செய்வதற்கு FDA இம்மாதம் 15ஆம் தேதியன்று சந்திப்பை நடத்தும் என்று தெரிவித்துள்ளது. 

Pfizer-BioNTech நிறுவனங்கள், அந்த வயது வரம்பில் உள்ள பிள்ளைகளுக்கு இரு முறை தடுப்பூசி போட மட்டுமே அனுமதி கோரியுள்ளன. இருப்பினும், அவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி தேவைப்படும் என்று நம்பப்படுகிறது. 

தடுப்புமருந்தினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்க, தடுப்பு மருந்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்தன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்