COVID-19 நோய்க்கு எதிரான தடுப்புமருந்துகள் - சவால்கள் என்னென்ன?
COVID-19 நோய்க்கான தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க உலக அளவில் பல நிறுவனங்கள் மும்முரமாக முயற்சி மேற்கொண்டுள்ளன.
COVID-19 நோய்க்கான தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க உலக அளவில் பல நிறுவனங்கள் மும்முரமாக முயற்சி மேற்கொண்டுள்ளன.
தற்போது ஏறக்குறைய 10 தடுப்புமருந்துகள் இறுதிக் கட்டச் சோதனை நிலையில் உள்ளன.
அவற்றில் அமெரிக்காவில் உள்ள Pfizer, Moderna மருந்தாக்க நிறுவனங்களின் தயாரிப்புகள் அதிக நம்பிக்கை தருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
RNA எனும் செயற்கை மரபணுக்களை Pfizer, Moderna நிறுவனங்களின் தடுப்புமருந்துகள் பயன்படுத்துகின்றன.
மனித உடலிலுள்ள உயிரணுக்களை ஊடுருவி, நோய் எதிர்ப்புக் கூறுகளாக மாற்றும் சக்தி அவற்றுக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் தடுப்புமருந்துகளைச் சுற்றி பல சவால்கள் உள்ளன.
ஏற்கெனவே சில தரப்பினர் தடுப்புமருந்துகளைப் போட்டுக்கொள்ள எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
சமூகத்தினர் இடையிலும், இணையத்திலும் பரப்பப்படும் தவறான தகவல்கள், தடுப்புமருந்துகளில் மக்கள் நம்பிக்கை கொள்வதை இன்னும் கடினமாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அது குறித்து 'செய்தி' மேல் விவரங்களை அறிந்துவந்தது.