Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

செப்பாங்கிலிருந்து சிங்கப்பூருக்குச் சைக்கிள் ஓட்டிய F1 ஓட்டுநர்!

வாசிப்புநேரம் -
செப்பாங்கிலிருந்து சிங்கப்பூருக்குச் சைக்கிள் ஓட்டிய F1 ஓட்டுநர்!

(படம்: Instagram / Valtteri Bottas)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 06 Oct 2026 06:40PM புதுப்பிப்பு : 07 Oct 2026 03:28PM
மலேசியாவின் செப்பாங்கில் F1 கார்ப் பந்தயம் முடிந்தது...

அடுத்து சிங்கப்பூரில் பந்தயம்...

இரு நகரங்களுக்கு இடையே பயணம்...

சைக்கிள் ஓட்டி வருகிறார் F1 வீரர் வேல்ட்டரி போட்டாஸ் (Valtteri Bottas)!

அந்தப் பயணத்தைப் பற்றி அவர் தமது Instagram பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

செப்பாங்கிலிருந்து சிங்கப்பூர் சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

தாம் கடந்து வரும் இடங்கள், காணும் காட்சிகள், சைக்கிள் ஓட்டிய தூரம், சைக்கிள் ஓட்டும் வேகம் ஆகியவற்றை எல்லாம் சமூக ஊடகத்தில் உடனுக்குடன் அவர் பதிவிட்டு வருகிறார்.

அவருடைய சைக்கிள் பயணம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரு போட்டாஸின் துணிச்சலைப் பலர் பாராட்டினர்.

கும்மிருட்டிலும் கடுமையான பாதைகளில் சைக்கிள் ஓட்டுவதை இணையவாசிகாள் மெச்சினர்.

பொதுவாக அத்தகைய இடங்களுக்குச் செல்ல உள்ளூர்வாசிகளே பயப்படுவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வேறு சிலர், F1 பந்தயத்தைவிட சைக்கிள் ஓட்டுவதுதான் திரு போட்டாஸின் விருப்பம் என்று கேலி செய்தனர்.

அடுத்த F1 பந்தயம் இவ்வாரம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்