Skip to main content
இந்திய மின் ஆலையில் வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்திய மின் ஆலையில் வெடிப்பு - 14 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் சட்டிஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் உள்ள மின் ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதில் 14 பேர் மாண்டனர்.

20 பேர் காயமுற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

வேதாந்தா (Vedanta) மின் ஆலையில் கொதிகலன் வெடித்தது என்றும் அது எப்படி வெடித்தது என்ற விசாரணை நடைபெறுகிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொதிகலன் அதிக வெப்பத்தால் வெடித்திருக்கும்  என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மாண்டோரின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

வேதாந்தா மின் ஆலை ராய்ப்பூர் (Raipur) நகரிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தியாவின் பெருஞ்செல்வந்தர் அனில் அகர்வாலின் நிர்வாகத்தில் வேதாந்தா  செயல்படுகிறது.

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்