Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவுக்கு $2 பில்லியன் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவிருக்கும் வெனிசுவேலா

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுக்கு $2 பில்லியன் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவிருக்கும் வெனிசுவேலா
REUTERS/Isaac Urrutia/File Photo
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 07 Jan 2026 10:10AM புதுப்பிப்பு : 07 Jan 2026 03:34PM

வெனிசுவேலாவிலிருந்து 2 பில்லியன் டாலர் (2.6 பில்லியன் வெள்ளி) மதிப்புள்ள கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்ள அந்நாட்டுடன் உடன்பாடு கண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெனிசுவேலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமென முன்னதாக அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். அமெரிக்கா கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததால் 
வெனிசுவேலாவின் மில்லியன்கணக்கான எண்ணெய்ப் பீப்பாய்கள் கப்பல்களில் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றுள் கொஞ்சம் சீனாவுக்கு விநியோகிக்கப்படவேண்டியிருந்தது.  அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதால் வெனிசுவேலாவிலிருந்து சீனாவுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய எண்ணெய் அமெரிக்காவுக்குத் திருப்பிவிடப்படலாம் என்று ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் சொன்னது. கடந்த 10 ஆண்டுகளில் வெனிசுவேலாவிலிருந்து ஆக அதிகம் எண்ணெய் வாங்கும் நாடாக விளங்குகிறது சீனா. 2020ஆம் ஆண்டிலிருந்து வெனிசுவேலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்