Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வெனிசுவேலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் : டிரம்ப்

வாசிப்புநேரம் -
வெனிசுவேலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் : டிரம்ப்
AP Photo
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெனிசுவேலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமென அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தற்போதுள்ள சந்தை விலையில் வெனிசுவேலாவின் எண்ணெய் விற்கப்படும், அந்தப் பணம் தம்முடைய கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்று திரு. டிரம்ப் Truth Social பதிவில் சொன்னார்.

வெனிசுவேலா - அமெரிக்க மக்கள் பயனடையும் வகையில் பணம் பயன்படுத்தப்படும் என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.

வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்யும் நிலையில் திரு டிரம்ப்பின் அறிவிப்பு வந்துள்ளது.

Exxon, Chevron, ConocoPhillips உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் அதிகாரிகளும் சந்திப்பில் கலந்துகொள்ளக்கூடும். 

வெனிசுவேலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை (Nicolas Maduro) அமெரிக்க ராணுவம் கைதுசெய்த பிறகு வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என்று திரு டிரம்ப் கூறினார்.

குறிப்பாக வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதில் அவர் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்