Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வாழ்ந்தால் இங்குதான் வாழவேண்டுமாம்...எங்கே?

வாசிப்புநேரம் -

உலகளவில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா (Vienna) வாழ்வதற்கு சிறந்த நகரம் என்று Economist சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வியன்னா ஏற்கனவே 2018, 2019-ஆம் ஆண்டுகளில் முதலிடத்தில் வந்தது.

நிலைத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு  ஆகிய அம்சங்கள் குடியிருப்பாளர்களைக் கவர்வதாகச் சஞ்சிகை சொன்னது.

தரவரிசையில் முதல் 10 இடங்களில் வந்த நகரங்களில் 6, ஐரோப்பாவைச் சேர்ந்தவை.

கோப்பன்ஹேகன், ஸூரிக் (Zurich), ஜெனீவா (Geneva), ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt), ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) ஆகிய ஐரோப்பிய நகரங்கள் தரவரிசையில் இடம்பெற்றிருந்தன.

ஒசாக்கா நகரமும், மெல்பர்ன் நகரமும் 10-ஆம் இடத்தில் வந்தன.

தரவரிசையில் மற்ற சில நகரங்கள் பிடித்த இடங்கள்

பாரிஸ் - 19
பிரசல்ஸ் - 24
லண்டன் - 33
பார்சலோனா-35
மிலான் - 49
நியூயார்க் - 51
பெய்ச்சிங் - 71
ஆக்லந்து - 34

சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) நகரம் வாழக்கூடிய நகரங்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடித்தது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்