வியட்நாமில் படகு கவிழ்ந்தது - 15 இந்தியர்கள் மரணம்
AFP
This audio is generated by an AI tool.
வியட்நாமின் சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் (Phu Quoc) தீவில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் மாண்டனர்.
அவர்கள் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் என்று வியட்நாமின் VnExpress ஊடகம் சொன்னது.
படகில் 36 பேர் இருந்தனர். அவர்களில் 4 பேர் ஊழியர்கள்; 32 பேர் இந்தியச் சுற்றுப்பயணிகள்.
கடலில் 400 மீட்டர் தூரம் பயணம் செய்துகொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாக VnExpress கூறியது.
நிலவரத்தைக் கண்காணித்துப் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முயற்சி எடுக்கப்படுவதாக வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் சொன்னது.
விசாரணை தொடர்வதாகவும் அது கூறியது.