மலையேறிய 9 மாதக் குழந்தை - திகைப்பில் இணையவாசிகள்
வாசிப்புநேரம் -
படம்: சீனச் சமூக ஊடகம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவின் ஹுபே மாநிலத்தில் உள்ள மலையொன்றில் 9 மாதக் குழந்தை படியேறும் காட்சிகள் இணையவாசிகளை வியக்கவைத்துள்ளது.
சமூக ஊடகத்தில் அந்தக் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.
200,000 லைக்ஸ். 17,000 கருத்துகள்!
காணொளியில் அந்தக் குழந்தையின் தாய் அதனை நெருக்கமாகப் பின்தொடர்வதைப் பார்க்க முடிகிறது.
குழந்தை பாதுகாப்புக்காக முழங்கால் கவசங்களை அணிந்திருக்கிறது. படிகளில் உற்சாகமாய் ஏறுகிறது வென் வென் எனும் அந்தக் குழந்தை.
வென் வென் மலையேறுவது இது முதல்முறை என்றார் அதன் தந்தை.
மலையேறப் பயிற்சி தருவது நோக்கமல்ல. பிள்ளையின் ஆற்றலை வலுப்படுத்த விரும்பியதாக அவர் கூறினார்.
இணையவாசிகளின் கருத்துகள் மாறுபட்டிருந்தன.
இவ்வளவு சிறிய வயதில் மலையேறுவது தேவைதானா? என்று வினவினார் ஒருவர்.
மற்றவர்கள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.
பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு அணுகுமுறையைப் பலர் பாராட்டினர்.
பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்காமல் இதுபோன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் என்று சிலர் தெரிவித்தனர்.
கையுறை அணிந்திருக்கலாம் என்று கூறினார் மற்றோர் இணையவாசி.

ஆதாரம் : South China Morning Post