Skip to main content
இந்தியா செல்லும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியா செல்லும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

வாசிப்புநேரம் -

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் Quad அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்வார்.

இம்மாதம் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை திரு ரூபியோ இந்தியாவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது.

இந்திய – அமெரிக்க உறவைப் பயணம் மேலும் வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்கியோ கோர் (Sergio Gor), திரு ரூபியோவை  இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்