Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெஸ்ஸி அடித்த கோலைக் கொண்டாடும் பார்வை இழந்த இளம் சிறுவன்....

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்கள் உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஒன்றிணைக்கின்றன.  

போட்டிகளை ரசிப்போரிடையே இருப்பவர்கள், இல்லாதவர்கள், இயலாதவர்கள் என்ற பாரபட்சம் கண்ணுக்குத் தெரிவதில்லை. 

அனைவரும் அவர்கள் விரும்பும் அணிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். 

அந்த வரிசையில் பார்வை இழந்த இளம் சிறுவன் ஒருவன் மெஸ்ஸி அடித்த கோலைக் கொண்டாடுவதாகக் காட்டும் காணொளி சமூகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 

சிறுவனின் பெயர் செபாஸ்டியன் ஃபிலொராமொ (Sebastian Filoramo). அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாளர் லயனல் மெஸ்ஸி (Lionel Messi). 

காணொளியில் செபாஸ்டியன் அர்ஜெண்டினா அணியின் சட்டையை அணிந்திருந்தார். 

மெஸ்ஸி கோலை எப்படிப் போட்டார் என்பதனைக் காட்ட செபாஸ்டியனின் தந்தை அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு பந்தின் அசைவுகளைக் காட்டியது காணொளியில் பதிவானது.  

இத்தகைய காட்சிகளைக் கண் பார்வை இழந்தவர்களுக்குக் காட்டுவதற்காகவே அமைக்கப்பட்ட மேசையை அவரது தந்தை பயன்படுத்தியிருந்தார். 

அந்தக் காணொளி ஆயிரக்கணக்கில் விருப்பக்குறிகளைப் பெற்றுள்ளது.

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்