Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

G20 வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு - பாலி செல்லும் வெளியுறவு அமைச்சர்

வாசிப்புநேரம் -


சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan), G20 வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் செல்கிறார்.

இன்றும் (7 ஜூலை) நாளையும் அவர் அங்கிருப்பார். 

இந்தோனேசியாவின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் அந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதாக, வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

உலகளாவிய நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எனும் முறையில் சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

அந்தக் குழுவில், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 30 சிறிய, நடுத்தர உறுப்பு நாடுகள் உள்ளன.

G20 தொழில்வள நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பிற உறுப்பு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் நடத்தப்படுவதற்கு அந்தக் குழு உதவுகிறது.

பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது,
உணவு, எரிசக்திப் பாதுகாப்பு நிலவரத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

G20 அமைப்புக்குத் தலைமைதாங்கும் இந்தோனேசியா, 'ஒன்றாக, வலுவாக மீட்சி அடைவது' எனும் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

டாக்டர் பாலகிருஷ்னன், மற்ற  நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்புச் சந்திப்புகளிலும் கலந்துகொள்வார்.

அவருடன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளும் பாலி செல்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்