Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசில் விமான விபத்து: மாண்டோரின் குடும்பங்களுக்கு உதவும் விமான நிறுவனம்

வாசிப்புநேரம் -
பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் மாண்டோரின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் வழங்க VOEPASS விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.

வின்யேடோ (Vinhedo) நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ATR-72 விமானம் கடந்த வெள்ளிக்கிழமை (9 ஆகஸ்ட்) விழுந்து நொறுங்கியதில் விமானத்திலிருந்த 62 பேரும் பலியாயினர்.

விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.

விமானத்திலிருந்த தகவல் பெட்டிகள் ஆய்வுசெய்யப்படுகின்றன.

விசாரணையின் தொடக்கக் கட்ட முடிவுகள் 30 நாளுக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாவ் பாவ்லோ (Sao Paulo) நகரில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு விமானத்தின் இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்