Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கத் துணையதிபர் வேட்பாளர்கள் நேர் விவாதம் - மத்திய கிழக்கு விவகாரம் முக்கிய இடம்பிடித்தது

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் துணையதிபர் வேட்பாளர்கள் இருவரும் இன்று நடத்திய விவாதத்தில் மத்திய கிழக்கு விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz), குடியரசுக் கட்சி வேட்பாளர் செனட்டர் JD வேன்ஸ் (JD Vance) இருவரும் அமெரிக்காவின் CBS தொலைக்காட்சியில் 90 நிமிடத்திற்கு விவாதித்தனர்.

தேர்தலுக்குமுன் இரு வேட்பாளர்களின் ஒரே தொலைக்காட்சி விவாதம் இது.

இன்றைய விவாதத்தில் குடியேற்றம், கருக்கலைப்பு, துப்பாக்கி வன்முறை, அமெரிக்கப் பொருளியல் ஆகியவை குறித்துப் பேசப்பட்டன.

மத்திய கிழக்குப் போர் போன்ற பெரிய விவகாரத்தைச் சமாளிக்கக்கூடிய பெருந்தலைவர் திருவாட்டி கமலா ஹாரிஸா அல்லது திரு டோனல்ட் டிரம்ப்பா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதற்கு இன்னும் 5 வாரங்களே உள்ளன.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்