Skip to main content
மத்திய கிழக்குப் போர், சண்டைநிறுத்தம்: தற்போதைய நிலவரம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்குப் போர், சண்டைநிறுத்தம்: தற்போதைய நிலவரம்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடப்பில் இருக்கும்.

அதையடுத்து ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரம் என்ன?

லெபனான் மீது தொடரும் தாக்குதல்கள்

இஸ்ரேல் தென் லெபனானில் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

ஆனால் அந்த ஒப்பந்தம் லெபனானை உள்ளடக்கியது அல்ல என்று அது சொன்னது.

எண்ணெய் விலைகள் சரிவு

சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலைகள் 20 விழுக்காடு சரிந்தன.

ஆசிய பங்குச்சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் கண்டன.

தங்கத்தின் விலையும் கூடியது.

பிரிட்டிஷ் பிரதமர் வளைகுடா நாடுகளுக்குப் பயணம்

பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) இன்று வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு அவர் வட்டாரத் தலைவர்களைச் சந்திப்பார்.

பஹ்ரேனில் வெடிப்புச் சத்தங்கள்

பஹ்ரேன் தலைநகர் மனாமாவில் இன்று காலை வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

அந்தத் தகவலை AFP செய்தியாளர் ஒருவர் வெளியிட்டார்.

வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அமெரிக்க-ஈரானியப் பேராளர் குழுக்கள் சந்தித்துப் பேசும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் (Shehbaz Sharif) தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் நெரிசல்

சண்டைநிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக எண்ணெய்க் கப்பல்கள் நீரிணையில் கூடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெரிசலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா உதவும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு வெற்றி என்றார் டிரம்ப்

அமெரிக்கா ஈரானுடன் இரண்டு வார சண்டைநிறுத்தத்திற்கு இணங்கியது தமக்கு முழு வெற்றி கிடைத்ததற்குச் சமம் என்றார் அதிபர் டிரம்ப்.

NATO தலைவரைச் சந்திக்கவிருக்கும் டிரம்ப்

வாஷிங்டன் நகரில் நேட்டோ (NATO) தலைவர் மார்க் ரட் (Mark Rutte) அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசவிருக்கிறார்.

தற்போதைய பாதுகாப்புச் சூழ்நிலை பற்றி மேலும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்