Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிரான கைதாணை உக்ரேனில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

வாசிப்புநேரம் -
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு (Vladimir Putin) எதிரான கைதாணை உக்ரேனில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்குக் கைதாணை பிறப்பித்தது.

இப்படியொரு நீதிமன்ற நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது நல்லதுதான் என்றாலும் உண்மையில் பெரிதாக ஏதும் செய்துவிட முடியாது;

திரு. புட்டின் மாண்டால்தான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும்; அவரைக் கைது செய்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை என்கின்றனர் கீவ் குடியிருப்பாளர்கள்.

மிக நீண்ட சட்ட நடைமுறையின் தொடக்கமே இந்தக் கைதாணை.

அதில் ஏராளமான தடங்கல்கள் உள்ளன.

உக்ரேனும் ரஷ்யாவும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற உறுப்பினர்கள் அல்ல என்பது அவற்றுள் முக்கியமானது.

கைதாணையை ஏற்கெனவே மாஸ்கோ நிராகரித்துவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நேரில் வராமல் விசாரணை நடைபெறுவதை அனைத்துலக நீதிமன்றம் ஏற்பதில்லை.

ரஷ்யாவில் ஆட்சிமாற்றம் நேர்ந்தால் தவிர போர்க் குற்றங்களுக்காகத் திரு. புட்டினைச் சிறையில் அடைப்பது சாத்தியமில்லை என்றே நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால் அவர் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாட்டுக்குச் சென்றால் அங்கே அவர் தடுத்துவைக்கப்படக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்