ஜொகூரில் மீண்டும் நிலநடுக்கம்
Facebook/Malaysian Meteorological Department
This audio is generated by an AI tool.
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அதிர்வுகள் வலுவாக இல்லை என்று நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
பின்னிரவு சுமார் 1.20 மணிக்கு பத்து பஹாட் (Batu Pahat) வட்டாரத்துக்கு அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பத்து பஹாட்டிலிருந்து தென்மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாய்க் கண்காணிப்பதாக ஆய்வகம் சொன்னது.
அது பத்து பஹாட் வட்டாரத்தில் ஏற்பட்ட ஆறாவது நிலநடுக்கம் என்று Free Malaysia Today ஊடகம் கூறியது.
இதற்குமுன் ஏப்ரல் 4ஆம் தேதி 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜொகூரில் நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்படுகிறது.