Skip to main content
காஸாவில் உணவை ஆயுதமாகப் பயன்படுத்துவது போர்க் குற்றம்: UN
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸாவில் உணவை ஆயுதமாகப் பயன்படுத்துவது போர்க் குற்றம்: UN

வாசிப்புநேரம் -
காஸாவில் உணவை ஆயுதமாகப் பயன்படுத்துவது போர்க் குற்றம்: UN

படம்: Eyad BABA / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காஸாவில் பொதுமக்களுக்கான உணவு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமை அலுவலகம் சாடியிருக்கிறது.

அது போர்க் குற்றத்திற்குச் சமம் என்றும் அது கூறியது.

அலுவலகம் இதுவரை வெளியிட்டிருக்கும் கருத்துகளில் அதுவே ஆகக் கடுமையானது.

இஸ்ரேல் ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறநிறுவனத்தின் புதிய உதவி முறை குறித்து அலுவலகம் கருத்துரைத்தது.

அறநிறுவனம் மே மாத இறுதியிலிருந்து உதவிப்பொருள் விநியோக இடங்களை நடத்துகிறது.

அதைச் சென்றடையும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவத்தால் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.

அந்த எண்ணிக்கையை நிறுவனத்தின் மனித உரிமை அலுவலகம் தன்னிச்சையாக உறுதிசெய்தது.

காஸாவின் மத்திய பகுதியில் உள்ள உதவி நிலையத்திற்கு அருகே கூடியிருந்த பொதுமக்கள்மீது இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

அதில் 21 பேர் மாண்டனர்.

சுமார் 150 பேர் காயமுற்றனர்.

அண்மை சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்