Skip to main content
மலேசியா மாணவி கொலை: மாணவர் கத்தியை இணையத்தில் வாங்கினார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியா மாணவி கொலை: மாணவர் கத்தியை இணையத்தில் வாங்கினார்

வாசிப்புநேரம் -
மலேசியாவில் உயர்நிலைப்பள்ளி மாணவியைக் கொலை செய்ய மாணவர் பயன்படுத்திய கத்தி இணையத்தில் வாங்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நேற்று சிலாங்கூர் மாநிலத்தின் பண்டார் உத்தாமா (Bandar Utama) நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

14 வயது மாணவர் கத்தியால் குத்தியதில் 16 வயது மாணவி மாண்டார்.

மாணவரிடமிருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை இணையத்தில் வாங்கப்பட்டவை என்று மாநிலக் காவல்துறைத் தலைவர் சொன்னார்.

மாணவர் கத்திகளை வாங்கியது அவரது குடும்பத்துக்குத் தெரியாது என்று ஆரம்பக்கட்ட விசாரணை கூறுகிறது.

சம்பந்தப்பட்ட இணையத்தளத்தையும் மாணவர் எத்தனை நாள் அந்தக் கத்திகளை வைத்திருந்தார் என்பதையும் கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்றுவருவதாக The Star நாளிதழ் கூறியது.

மாணவர் வைத்திருந்த கத்திகளில் ஒன்று காயத்தை ஏற்படுத்தியதாகப் பிரேதப் பரிசோதனை கூறுகிறது.

மாணவர் பள்ளிக்குள் வரும்போது அவரது புத்தகப் பை சோதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்