Skip to main content
மேற்குக் கரையில் இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மேற்குக் கரையில் இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதல் - Reuters செய்தியாளர் உட்பட பலர் காயம்

வாசிப்புநேரம் -
இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரையில் மூன்று நாள் ராணுவப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

காஸா போர் தொடங்கியது முதல் மேற்குக் கரையில் குடியிருக்கும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் பிரச்சினை அதிகரித்தது.

திடீர்ச் சோதனைகளும், வீடுகள் இடிக்கப்படுவதும், கைது நடவடிக்கைகளும் வட்டாரத்தில் வழக்கமாகிவிட்டன.

ஓலிவ் மரங்கள் நிறைந்திருக்கும் மேற்குக் கரையின் பகுதிகளில் பாலஸ்தீனர்கள் கொண்டாடும் வருடாந்தர விழாவின்போது பிரச்சினை வெடித்தது.

அங்கு சுமார் 40 பேர் ஓலிவ் அறுவடைக்குக் கூடியிருந்ததாகவும் திடீரென்று வந்த இஸ்ரேலியக் குடியிருப்பாளர்கள் அவர்களைத் தாக்கியதாகவும் சொல்லப்பட்டது.

அடிபட்டவர்களில் ஒருவர் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தியாளர்.

அவரும் அவரைக் காப்பாற்ற வந்தவர்களும் இரக்கமின்றிக் கல்லால் அடிக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

மேற்குக் கரையில் சென்ற மாதம் மட்டும் அப்படிப்பட்ட 260 சம்பவங்கள் நடந்ததாக ஐக்கிய நாட்டு நிறுவன அறிக்கை சொல்கிறது.

சம்பவத்தை இஸ்ரேலிய ராணுவம் கண்டித்தது. நிலைமையைச் சீராக்க வீரர்களை அனுப்பியதாகச் சொன்னது. ஆனால் எவரும் வரவில்லை என்கின்றனர் மேற்குக் கரைவாசிகள்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் சம்பவத்தைத் தீர விசாரிக்குமாறு இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்