Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் ஓமக்ரான் கிருமிப்பரவலால் எல்லைகளைத் திறக்கும் திட்டங்கள் ரத்து

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் ஓமக்ரான்
வகைக் கிருமித்தொற்றுச் சம்பவங்களால் எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டங்களை
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம் ரத்து செய்துள்ளது.

முன்னதாக அடுத்த மாதம் 5ஆம் தேதியிலிருந்து எல்லைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

அந்த வகைக் கிருமி வேகமாக பரவுவதால் எல்லைகளைத் திறப்பது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்று மாநில
முதல்வர் கூறினார்.

எல்லையைத் திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி அல்லது booster எனும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டார் எண்ணிக்கை 80 விழுக்காட்டை எட்டும்வரை ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது அது 26 விழுக்காடாய் உள்ளது.

நாட்டில் நோய்வாய்ப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்