திமிங்கிலங்கள் எவ்வாறு பாடுகின்றன?
pixabay
திமிங்கிலங்கள் எவ்வாறு பாடுகின்றன என்பதைக் கண்டறிவதில் டென்மார்க் ஆய்வாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அவை ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்புகொள்கின்றன என்பதை ஆய்வில் அறியமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஆய்வில் திமிங்கிலங்களின் குரல்வளை ஆராயப்பட்டது.
கொழுப்பையும் திசுக்களையும் பயன்படுத்தி அவை நீருக்கடியில் பாடுவதுண்டு.
ஹம்ப்பேக் (humpback) வகைத் திமிங்கிலங்கள் பெருங்கடலுக்குள் செல்லுபோது சிறப்புக் குரல்வளையில் இசை மீட்டுகின்றன.
சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு திமிங்கிலங்கள் நிலப் பகுதியில்தான் வாழ்ந்தன.
அதன் பின்னரே அவை நீர்ப் பகுதிக்குள் குடிபுகுந்தனவாம்.
நீருக்கடியில் ஒலி எழுப்பக் கற்றுக்கொள்ள அவற்றுக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளாயின.
பலீன் (baleen) வகைத் திமிங்கிலங்களுக்குப் பற்கள் இல்லை.
மாறாக அவற்றின் குரல்வளையில் U-வடிவில் திசு இருக்கிறது.
அது பெரும் அளவில் காற்றை உள்ளிழுக்க உதவுகிறது.
ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவை அனைத்தும் இளம் திமிங்கிலங்கள்.
வயதான திமிங்கிலங்களையும் பரிசோதனை செய்த பிறகே ஆய்வு முழுமை பெறும் என்கின்றனர் வல்லுநர்கள்.