Skip to main content
ஈரான் போர்: அலி கமேனியின் உயிலில் மகனின் பெயர் இல்லை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

ஈரான் போர்: அலி கமேனியின் உயிலில் மகனின் பெயர் இல்லை?

வாசிப்புநேரம் -
ஈரான் போர்: அலி கமேனியின்  உயிலில் மகனின் பெயர் இல்லை?
Kawnat HAJU / AFP

ஈரானின் புதிய உச்சத்தலைவராக முஸ்தபா கமேனி அண்மையில் பொறுப்பேற்றார்.

ஆனால் முஸ்தபா, அவரது தந்தை ஆயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) விருப்பமான தெரிவு அல்ல என்று கூறப்படுகிறது.

முஸ்தபாவின் பெயர் கமேனியின் உயிலில் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தமது வாரிசாக முஸ்தபாவை அறிவிக்க வேண்டாம் என்று கமேனி தமது உயிலில் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டதாக New York Post ஊடகம் கூறியது. ஈரானிய  உளவுத்துறையுடன் தொடர்புடைய கொஸ்ரோ இஸ்ஃபஹானியை (Khosro Isfahani) அது மேற்கோள்காட்டியது. 

இந்நிலையில் 56 வயது முஸ்தபா ஈரான் புரட்சிக் காவல் படை (IRGC) ஆதரவில்தான் உச்சத்தலைவர் பொறுப்புக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

திரு கமேனியைவிட முஸ்தபா வளைந்து கொடுப்பார் என்றும், தங்களது கடுமையான கொள்கைகளுக்கு  முஸ்தபா ஆதரவாக இருப்பாரென்றும் புரட்சிக் காவல் படை நம்புகிறது.

முஸ்தபாவின் நியமனம் குறித்து மூத்த அரசியல், சமயத் தலைவர்களிடையே எதிர்ப்பு இருந்தது.

இதனால் முஸ்தபாவின் பதவியேற்புக் குறித்த அறிவிப்பு சில மணிநேரம் தாமதமானது. முஸ்தபா இதுவரை எந்தவொரு பொதுத்தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், முஸ்தபா ஈரானின் புதிய உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருந்தார்.

கமேனியின் கொள்கைகளைத் தொடரக்கூடிய ஒருவரை நியமித்திருப்பது என்பது அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் போருக்கு வழிவகுப்பதற்குச் சமம் என்று திரு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்