Skip to main content
Epstein ஆவணங்கள் என்றால் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Epstein ஆவணங்கள் என்றால் என்ன?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பல ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட எப்ஸ்டெய்ன் (Epstein) ஆவணங்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டெய்ன் (Jeffrey Epstein) தொடர்பான நீதித்துறையின் ஆவணங்களை வெளியிடுவதற்கு ஆதரவாக அமெரிக்க மக்களவை வாக்களித்துள்ளது.

2019ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களுக்காகச் சிறையில் இருந்தபோது எப்ஸ்டெய்ன் மாண்டார்.

எப்ஸ்டெய்ன் ஆவணங்கள் என்றால் என்ன?

எப்ஸ்டெய்னை விசாரித்தபோது அமெரிக்க நீதித்துறையும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையும் சேகரித்த ஆதாரங்கள் தான் எப்ஸ்டெய்ன் ஆவணங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

2008ஆம் ஆண்டு அந்த விசாரணையின் முடிவில் எப்ஸ்டெய்ன் சிறுவயதுப் பெண்ணை விபச்சாரத்திற்கு உட்படுத்தியதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த ஆதாரங்களில் சிறிய பகுதி மட்டுமே பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

30 நாளுக்குள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும் என்று மக்களவை வாக்களித்திருக்கிறது.

எப்ஸ்டெய்னுக்கும் பல தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) அவர்களில் ஒருவர்.

ஆனால் எப்ஸ்டெய்ன் முக்கியப் புள்ளிகளை மிரட்டியதாகவோ வாடிக்கையாளர் பட்டியல் வைத்திருந்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை கூறுகிறது.

எப்ஸ்டெய்ன் தனிப்பட்ட முறையில் 1,000க்கும் அதிகமானோருக்குத் தீங்கு விளைவித்தார் என்று அது சொன்னது.

மூன்றாம் தரப்பினர் மீது விசாரணை நடத்துவதற்கு ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என்று அது குறிப்பிட்டது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்