Skip to main content
டிரம்ப் விதித்த வரி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டிரம்ப் விதித்த வரி - எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை விழுக்காடு?

வாசிப்புநேரம் -
டிரம்ப் விதித்த வரி - எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை விழுக்காடு?

(படம்: SAUL LOEB / AFP)

அமெரிக்கா அனைத்து இறக்குமதிகளுக்கும் குறைந்தது 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வரி விதிப்பு ஏப்ரல் 5ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் மணி 12.01க்கு நடப்புக்கு வரும்.

அடுத்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல் 9) முதல் சுமார் 60 பொருளாதாரங்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

ஆசியாவும் திரு டிரம்ப் விதித்த வரிகளும்:

கம்போடியா (Cambodia) – 49%
லாவோஸ் (Laos) – 48%
வியட்நாம் (Vietnam) – 46%
மியன்மார் (Myanmar) – 45%
தாய்லந்து (Thailand) – 37%
சீனா (China) – 34%
இந்தோனேசியா (Indonesia) – 32%
தைவான் (Taiwan) – 32%
இந்தியா (India) – 27%
தென் கொரியா (South Korea) – 26%
புருணை (Brunei) – 24%
ஜப்பான் (Japan) – 24%
மலேசியா (Malaysia) – 24%
பிலிப்பீன்ஸ் (Philippines) – 18%
சுருக்கமாகப் பார்க்க
இவை அனைத்தும் 10 விழுக்காட்டு அடிப்படை வரியை உள்ளடக்கியுள்ளன.

ஆசியானைப் பொறுத்தவரை சிங்கப்பூருக்கு மட்டுமே கூடுதல் வரி விதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு விழுக்காட்டில் வரி விதிக்கப்பட்டதற்கான காரணத்தைத் திரு டிரம்ப் விவரிக்கவில்லை.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்