உலகை மிரட்டும் Claude Mythos - என்ன? எதனால்?
படம்: PATRICK SISON / AP
கிளாட் மிதோஸ் (Claude Mythos).
இது ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கிளாட் மிதோஸ் வெறும் தகவல் சொல்லும் கருவியல்ல; மனிதனின் சிந்தனையைவிட வேகமாகச் செயல்படும் ஓர் இயந்திரம்.
இதனை "டூம்ஸ்டே ஏஐ" (Doomsday AI), அதாவது மனித குலத்திற்கே ஆபத்தான தொழில்நுட்பம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆபத்து அவ்வளவு பெரியது.
அதனால் இதனைப் பொதுமக்களுக்கு இன்னும் வெளியிடாமல் இருக்கிறது நிறுவனம்.
இதில் அப்படி என்ன அதியசம் இருக்கிறது என்று வாய்பிளந்து யோசித்து முடிப்பதற்குள்....
மனிதனால் பல மாதங்களாகக் கண்டுபிடிக்க முடியாத, சுமார் 27 ஆண்டுகளாக மறைந்திருந்த 'OpenBSD' மென்பொருள் ஓட்டையை இது சில நொடிகளில் கண்டுபிடித்து உலகையே அதிரவைத்திருக்கிறது.
இது எப்படி செயல்படுகிறது?
மிதோஸ் அரட்டை மட்டும் அடிக்காது.
இது சுயமாகச் செயல்படும் ஒரு கருவி.
ஒரு வேலையைக் கொடுத்தால், அதற்குத் தேவையான திட்டத்தை அதுவே தீட்டும்.
மனித உதவி இல்லாமலேயே ஒரு கணினியின் முழு கட்டுப்பாட்டையும் கையில் எடுக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், இணையத்தையே முடக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
இதன் திறமையைக் கண்டு உலக நாடுகள் அஞ்சுகின்றன.
உலக வங்கிமுதல் ஜப்பானின் சிறப்புப் பாதுகாப்புக் குழு வரை அனைவரும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
எதனால்?
இந்த AI கருவி தவறான கைகளில் கிடைத்தால் உலகப் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும்.
எனவே, இதனை 'புரோஜெக்ட் கிளாஸ்விங்' (Project Glasswing) என்ற ரகசியத் திட்டத்தின்கீழ் வைத்துள்ளனர்.
ஆப்பிள் (Apple), கூகள் (Google), மைக்ரோசாஃப்ட் (Microsoft), அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 12 நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் மட்டுமே திட்டத்தில் உள்ளன.
இவை இந்தக் கருவிக்குப் பாதுகாப்புக் குழுவாகச் செயல்படுகின்றன.
இந்தக் கருவி தவறானவர்களின் கைகளில் கிடைக்கும் முன்னர், தற்காப்பு அரண்களை உருவாக்கவேண்டும் என்பது குழுவின் நோக்கம்.