Skip to main content
மத்திய கிழக்கில் சிக்கிக்கொண்ட மக்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்கில் சிக்கிக்கொண்ட மக்கள் - உலக நாடுகளின் நடவடிக்கை?

வாசிப்புநேரம் -

மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் போர்ச் சூழலிலிருந்து மக்களைக் காப்பாற்ற சிங்கப்பூர் உள்ளிட்ட பல உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுத்துவருகின்றன.

அவை என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளத் தகவல்களைத் திரட்டியது 'செய்தி'.

சிங்கப்பூர்

➡️உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களைக் கண்டுபிடிக்க வெளியுறவு அமைச்சு கருத்தாய்வு நடத்தியது.

➡️4 வழிகள் ஆலோசிக்கப்படுகின்றன.

➡️மத்திய கிழக்கில் உள்ள சிங்கப்பூரர்கள் அமைச்சின் இணையத் தளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம்.


மலேசியா

➡️மத்திய கிழக்கில் வேலை செய்யும் 29,000க்கும் மேற்பட்ட மலேசியர்களைக் கொண்டுவர மலேசியா திட்டமிடுகிறது.

➡️அங்குள்ள தூதரகங்களுடன் வெளியுறவு அமைச்சு ஒத்துழைத்துவருகிறது.


இந்தியா

➡️வளைகுடா நாடுகளிலுள்ள தூதரகங்களுடன் இணைந்து பாதுகாப்பான விமானப் பயண ஏற்பாடுகள் செய்வது பற்றி இந்தியா ஆலோசித்துவருகிறது.


இந்தோனேசியா

➡️தெஹ்ரானிலிருந்து அஸர்பைஜான் (Azerbaijan) வழியாக தனது மக்களை வெளியேற்ற இந்தோனேசிய முயற்சி செய்கிறது.

➡️அது 10 மணி நேரப் பயணம்.


இலங்கை

➡️மத்திய கிழக்கில் சிக்கியுள்ளவர்களுக்கு இலங்கை இலவச 14 நாள் விசா நீட்டிப்பு வழங்குகிறது.

➡️24/7 நேரடித் தொலைபேசி எண்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இங்கிலாந்து

➡️இங்கிலாந்து தனது மக்களை மத்திய கிழக்கு வட்டாரங்களிலிருந்து வெளியேற்ற முதல் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.


ஆஸ்திரேலியா

➡️மத்திய கிழக்கில் 115,000 ஆஸ்திரேலியர்கள் சிக்கியுள்ளனர்.

➡️அவர்களுக்கு உதவ விமான நிறுவனங்களுடன் ஆஸ்திரேலியா பேசி வருகிறது.


பிரான்ஸ்

➡️போரினால் 400,000 பிரெஞ்சு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

➡️இதுவரை "Ariane" அமைப்பில் 25,000க்கும் மேற்பட்டோர் உதவிக்காகப் பதிவுசெய்துள்ளனர்.


ஜெர்மனி

➡️மத்திய கிழக்கில் சுமார் 30,000 ஜெர்மன் மக்கள் சிக்கியுள்ளனர்.

➡️ராணுவ உதவிதான் கடைசி வழி என்று ஜெர்மனி நம்புகிறது.


இத்தாலி

➡️ஓமானில் சிக்கியுள்ள 127 இத்தாலிய மக்களை ஏற்றிச்சென்ற முதல் விமானம் மார்ச் 2ஆம் தேதி இரவு ரோமில் தரையிறங்கியது.


ஸ்பெயின்

➡️மத்திய கிழக்கிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டதாக ஸ்பெயின் தெரிவித்தது.


அமெரிக்கா

➡️மத்திய கிழக்கிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா தனது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

➡️ஆனால் மக்களை மீட்டும் விமானப் பயணங்கள் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்