Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விண்வெளி நிலையத்தில் வீரர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?

வாசிப்புநேரம் -

விண்வெளிக்குச் சென்றுவரப் பலருக்கும் ஆசை இருக்கும். 

ஆனால் அது எளிதான காரியமல்ல. 

பூவியீர்ப்பு விதிக்கேற்பச் செயல்படும் மனித உடல், எடையற்ற விண்வெளிக்குச் சென்று திரும்பும்போது பழைய நிலைக்குத் திரும்பச் சற்றுக் காலம் ஆகலாம் என்கிறது தகவல்.

அதே சூழ்நிலையில் இருந்தனர் அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து  ஒன்பது மாதத்திற்குப் பிறகு நேற்று (19 மார்ச்) பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) புட்ச் வில்மோர் (Butch Wilmore).

விண்வெளி மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சூழல்; அதனால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்ளும் அளவுக்கு மனித உடல் இன்னும் பரிணாமம் அடையவில்லை என்கிறார் சௌத் வேல்ஸ் பல்கலைக்கழக மனித உடலியியல் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டேமியன் பெய்லி (Damian Bailey).

விண்வெளிக்குச் செல்வது முதலில் அற்புதமான உணர்வைக் கொடுக்கும்.

இதயம், உடல் தசை, எலும்புகளில் இறுக்கம் குறையும் என்கிறார் 2015இல் விண்வெளிக்குச் சென்றுவந்த டிம் பீக் (Tim Peake). 

விண்வெளியில் மிதக்கும் அனுபவம் அதற்குக் காரணம் என்றார் அவர். 

தசையைப் பயன்படுத்தாவிட்டால் அதனை இழந்துவிடுவோம்.

சீக்கிரம் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். 

"ஒவ்வொரு மாதமும், அவர்களின் எலும்பு, தசைகளில் சுமார் 1% வாடிப்போகும். இது வயதான தோற்றத்தைத் துரிதப்படுத்தும்" என்கிறார் பேராசிரியர் பெய்லி.

சுனிதாவும் வில்மோரும் தசை வலிமையைப் பெறத் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் BBC செய்தியிடம் சொன்னார்.

வெறும் தசை, எலும்பு மட்டுமல்ல; விண்வெளிப் பயணம் முழு உடலையும் மாற்றும் என்கிறார் டாக்டர் ஹெலன் ஷர்மன் (Dr Helen Sharman). விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் பிரிட்டன் நாட்டவர் அவர்.

உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகள் மாறிவிடும். 

உடலிலுள்ள திரவங்களும் இடம்பெயரும்.

திரவங்கள் கால்களை நோக்கி இழுக்கப்படுவதற்குப் பதிலாக, மார்பு, முகத்தை நோக்கி நகரும். இதனால் முதலில் முகம் வீங்கக்கூடும்.

நரம்பியல் சிக்கல்களும் வரலாம். 

பார்வை மங்கலாகலாம்.

மயக்கம் வரக்கூடும்.

"விண்வெளியிலிருந்து திரும்பிய ஒருவர் பழையபடி நடமாடத் தொடங்கும்போதுதான் மயக்கம் வருவது நிற்கக்கூடும்" என்கிறார் டிம் பீக். 

ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்