Skip to main content
Galentine பெரிதா? Valentine பெரிதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Galentine பெரிதா? Valentine பெரிதா?

வாசிப்புநேரம் -
அன்பர் தினம் (Valentines' Day) ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால் சிலர் வித்தியாசமாக Galentinesஐக் கொண்டாடுகின்றனர்.

அது என்ன?

அன்பைக் கொண்டாடும் தினம் தான். குறிப்பாக, தோழிகளுடனான நட்பைக் குறிக்கும் தினமாக அமைந்துள்ளது.

பொதுவாக அன்பர் தினத்தன்று காதலர்கள் மட்டும் தங்களது அன்பைக் கொண்டாடுவார்கள்.

ஆனால் துணையில்லாத பெண்களுக்கும் அன்பர் தினத்தைக் கொண்டாட உரிமை உள்ளது என்று பலர் கருதியதால் Galentines உருவாக்கப்பட்டது.

ஒரு வகையில் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்க Galentines கொண்டாடப்படுகிறது.

ஆனால் பெண்கள் மட்டும் Galentines கொண்டாடவேண்டியது அவசியமில்லை. துணையில்லாத யாராயினும் அதைக் கொண்டாடலாம்.

எப்படி தோன்றியது?

அமெரிக்க நகைச்சுவைத் தொடர் Parks and Recreationஇல் Galentines முதன்முதலில் இடம்பெற்றது.

அதில் முக்கியக் கதாப்பாத்திரம் அன்பர் தினத்துக்குப் பதிலாகத் தமக்கு மிகவும் நெருக்கமான தோழிகளுடன் கொண்டாடுவதை Galentines Day என்று அழைத்தார்.

அன்றிலிருந்து Galentines தினம் மக்களிடையே பரவத் தொடங்கியது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்