சுகாதார நெருக்கடிகளைச் சந்திப்போருக்கு உதவ இரண்டரை பில்லியன் டாலர் நிதி தேவை

AFP
உலகெங்கிலும் சுகாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் மில்லியன் கணக்கானோருக்கு உதவ, உலகச் சுகாதார நிறுவனம் இரண்டரை பில்லியன் டாலருக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாண்டு மட்டுமே, முன்னெப்போதும் இல்லாத வகையில் 339 மில்லியன் பேருக்கு ஏதேனும் ஒரு வகையில் நெருக்கடி உதவி தேவைப்படும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் அந்த விகிதம் சுமார் 25 விழுக்காடு அதிகம்.
தற்போது உலகெங்கிலும் உருவாகியுள்ள 54 சுகாதார நெருக்கடிகளைக் கையாள்வதாக உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.
அவற்றில் 11 நெருக்கடிகள், ஆகிய உயரிய அவசரநிலையை எதிர்நோக்குவதாக அது சொன்னது.
உக்ரேன் போர், காங்கோ குடியரசில் ஏற்பட்டுள்ள காலரா, குரங்கம்மை, சோமாலியா எதிர்நோக்கும் பட்டினி ஆகிய நெருக்கடிகள் அதில் அடங்கும்.