Skip to main content
ஈரானின் லாரிஜானி யார்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானின் லாரிஜானி யார்?

வாசிப்புநேரம் -

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.

அலி லாரிஜானி என்பவர் யார்?

68 வயது லாரிஜானி ஈரானின் அதிகச செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

1957இல் ஈராக்கில் பிறந்த அவரின் தந்தை பிரபலமான சமயப் போதகர். 

தந்தை ஈரானைத் தோற்றுவித்த முதல் உச்சத் தலைவர் அயத்துல்லா ருஹோல்லா கொமேனிக்கு (Ayatollah Ruhollah Khomeini) நெருக்கமானவர்.

ஈரான்-ஈராக் போரில்  புரட்சிப் படையில் முக்கிய பங்காற்றிய லாரிஜானி 1994இல் ஈரானின் அரசாங்க ஒளிபரப்பு நிறுவனத்தை வழிநடத்தினார்.

பின்னர் நாடாளுமன்ற நாயகராகவும் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பொறுப்பாற்றினார்.

அவர் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு (Ayatollah Ali Khamenei) மிகவும் நெருக்கமானவரானார்.

அமெரிக்காவுடனான அணுச்சக்திப் பேச்சில் கமேனிக்கு ஆலோசனை வழங்கியவர் அவர்.

அவரின் கொலை ஈரானின் தலைமைத்துவத்துக்குப் பெரிய பாதிப்பு என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்