Skip to main content
உலகெங்கும் புற்றுநோய் எச்சரிக்கும் WHO
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகெங்கும் புற்றுநோய் எச்சரிக்கும் WHO

வாசிப்புநேரம் -
உலகெங்கும் புற்றுநோய் எச்சரிக்கும் WHO

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புற்றுநோய் சிகிச்சையில் அளப்பரிய முன்னேற்றம் கண்டிருந்தாலும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் உடல், மன ரீதியாகக் கடுமையான வேதனையை அனுபவிக்கின்றனர்.

பெரும் நிதி நெருக்கடியையும் எதிர்கொள்கிறார்கள்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் புதிய அறிக்கை இதனைத் தெரிவித்தது.

உலகம் முழுவதும் புற்றுநோய்ச் சம்பவங்கள் வேகமாக அதிகரிக்கலாம் என்று அறிக்கை எச்சரிக்கிறது.

வாழ்நாளில் ஐந்தில் ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் அமைப்பு கணிக்கிறது.

தற்போது உலகளவில் ஆண்டுக்குச் சுமார் 22 மில்லியன் பேருக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 10 மில்லியன் மரணங்கள் பதிவாகின்றன.

2050ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் உள்ளோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 35 மில்லியனாக உயரலாம்.

ஏழை நாடுகளில் தாக்கம் அதிகம் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

அங்குச் சரியான மருந்துகள், சிகிச்சைகள், வளங்கள் இல்லை என்று அங்கலாய்க்கிறது அது.

பணக்கார நாடுகளில் மார்பகப் புற்றுநோய் அல்லது குழந்தைப் பருவம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் உயிர் பிழைக்கிறார்கள். ஆனால் ஏழை நாடுகளில் இந்த விகிதம் 30 விழுக்காட்டுக்கும் கீழே குறைகிறது என்று அறிக்கை சொல்கிறது.

புற்றுநோய்த் தடுப்பு, சிகிச்சை, நீண்டகாலப் பராமரிப்பு ஆகியவற்றில் நாடுகள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

புற்றுநோய்ச் சம்பவங்கள் திடீர் என்று அதிகரிக்க என்ன காரணம் என்பது பற்றி அது ஒன்றும் சொல்லவில்லை.
ஆதாரம் : Others/The Guardian

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்