Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கௌதம் அதானி - யார் இவர்?

வாசிப்புநேரம் -

இந்தியச் செல்வந்தர் கௌதம் அதானி கையூட்டுத் தொடர்பில் அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கௌதம் அதானி யார் ?

அதானிக்கு வயது 62.

இளவயதில் மும்பைக்குச் சென்று வைரத் தொழில் செய்தார்.

பின்னர் சொந்தமாக இறக்குமதி-ஏற்றுமதித் தொழிலைத் தொடங்கினார்.

1995இல் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

இந்தியாவின் பொருளியல் விரிவடையத் தொடங்கியபோது கப்பல் துறைமுகமொன்றைக் கையகப்படுத்தினார்.

தற்போது அதானி குழுமம் மின் உற்பத்தி, ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கங்கள், சிமெண்ட் நிறுவனம், ஊடகம், உணவு, விமான நிலைய முனையங்கள், இஸ்ரேலியத் துறைமுகங்கள் என பல தொழில்களைச் செய்துவருகிறது.

அதானிக்கும் அரசாங்கத்துக்கும் என்ன தொடர்பு?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருங்கியவர். அதானியும் குஜராத்தைச் சேர்ந்தவர்.

2014இல் திரு மோடியின் தேர்தல் பிரசாரத்துக்குத் தனிப்பட்ட ஜெட் விமானத்தைக் கொடுத்தவர் அதானி.

திரு மோடியை வெளிப்படையாக விமர்சித்த தொலைக்காட்சி நிறுவனத்தை எதிர்த்தவர்.

திரு மோடியுடனான உறவைத் தொழில் லாபத்துக்காகப் பயன்படுத்துவதாக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் அதானியை விமர்சித்தனர்.

ஆனால் அவற்றை அதானி மறுத்தார்.

அதானி ஏன் குற்றஞ்சாட்டப்பட்டார்?

2 பில்லியன் டாலருக்கும் (2.68 பில்லியன் வெள்ளி) அதிக மதிப்புள்ள குத்தகைகளைப் பெறுவதற்காக அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலருக்கும் (335 மில்லியன் வெள்ளி) அதிகமாகக் கையூட்டுக் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அனைத்துலக முதலீட்டாளர்களிடம் கையூட்டைப் பற்றிப் பொய் சொன்னதாக அதானி மீதும் மேலும் 7 அதிகாரிகள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அறிந்திருப்பதாக அதானி குழுமம் கூறியது.

யாரும் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

திரு மோடி அரசாங்கம் இன்னும் கருத்துரைக்கவில்லை.

ஆனால் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு திரு மோடியை அல்ல மாறாக எதிர்க்கட்சிகளை உட்படுத்தியிருப்பதுபோல் தெரிவதாக அரசாங்கப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அதானி குழுமத்துக்கு இதற்குமுன்னர் சிக்கல் ஏற்பட்டுள்ளதா?

அதானி குடும்பத்தார் ரகசியமாகத் தங்கள் சொந்தப் பங்குகளை வாங்கியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தன.

திருத்தம்:

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அறிந்திருப்பதாக அதானி குழுமம் கூறியது.

இதற்குமுன்னர் இந்த வாக்கியம் "குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது" என்று இருந்தது. அது தற்போது திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்படுகிறது.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்