தென் கொரியத் தற்காலிக அதிபர் ஹான் டாக் சூ - யார் இவர்?
வாசிப்புநேரம் -
தென் கொரிய பிரதமர் ஹான் டாக்-சூ (Han Duck Soo) கடந்த 8 ஆண்டில் அந்நாட்டின் முதல் தற்காலிக அதிபராகியிருக்கிறார்.
40 ஆண்டு காணாத அரசியல் கொந்தளிப்பைத் தென் கொரியா சந்திக்கும் நிலையில் அரசாங்கத்தை வழிநடத்தும் சவால்மிக்க பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
நிலையான, விவேகமான தலைமைத்துவத்திற்குப் பெயர் பெற்றவர் அவர். அவரின் அனுபவம் புதிய பதவியில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
75 வயது தொழில்நுட்ப வல்லுநரான அவர் 5 அதிபர்களின்கீழ் 30 ஆண்டுக்கும் மேல் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
தென் கொரியாவின் நிதி அமைச்சர், வர்த்தக அமைச்சர், அமெரிக்காவுக்கான தூதர் எனப் பல பொறுப்புகளில் அவர் இருந்துள்ளார்.
ஆய்வுக் குழுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் தலைமை வகித்துள்ள திரு. ஹான், தனியார் துறையிலும் வேலை செய்திருக்கிறார்.
சோல் தேசியப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பயின்ற அவர், பொருளியலில் முதுநிலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் ஹார்வர்டு (Harvard) பல்கலையிலிருந்து பெற்றார்.
பொருளாதார வல்லுநர், அரசதந்திரி என்ற முறையில் அவரின் அனுபவம் புதிய பொறுப்புக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Reuters