Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகச் சுகாதார நிறுவனம், மேலும் சுதந்திரமாகச் செயல்பட முன்வைத்த பரிந்துரைகளை நிராகரிக்கும் அமெரிக்கா

வாசிப்புநேரம் -
உலகச் சுகாதார நிறுவனம், மேலும் சுதந்திரமாகச் செயல்பட முன்வைத்த பரிந்துரைகளை நிராகரிக்கும் அமெரிக்கா

(படம்: Reuters/Denis Balibouse)

உலகச் சுகாதார நிறுவனம், மேலும் சுதந்திரமாய்ச்  செயல்படுவதற்கு முன்வைக்கப்பட்டப் பரிந்துரைகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. 

நிறுவனத்தின் முன்னணி நன்கொடையாளராய் அமெரிக்கா விளங்குகிறது. 

எனவே நிறுவனத்திற்கு நீண்ட காலத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்குமா எனும் ஐயம் எழுந்துள்ளது. 

நிறுவனத்தின் நீடித்த நிதிக்கான பணிக்குழு, தான்  முன்வைத்த பரிந்துரையின்படி,  
உறுப்பு நாடுகள் ஆண்டுதோறும் வழங்கும்  நிதிப் பங்களிப்பு அதிகரிக்கும் என்று கூறியது. 

COVID-19 கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சீர்செய்யும் பொருட்டுப் பணிக்குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் உடன்படவில்லை.

எதிர்காலத்தில்  சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வரும் மிரட்டல்களைச் சமாளிக்கும் உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆற்றல் குறித்து அமெரிக்கா கவலைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாறாக நன்கொடையாளர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தனிப்பட்ட நிதியமைப்பை அமெரிக்கா விரும்புகிறது.

அத்தகைய நிதியமைப்பு, சுகாதார நெருக்கடிகளைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும்  நிதியுதவி அளிக்கும் என்று அமெரிக்கா கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்