Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் எரிசக்தித் தட்டுப்பாடா? பீதி வேண்டாம் என்கிறார் பிரதமர்

வாசிப்புநேரம் -
ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது பற்றிப் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் பாதிப்பு இருப்பதாக அவர் சொன்னார்.

தமிழகத்தில் நடந்த பேரணியில் பேசிய அவர் நெருக்கடியை இந்தியா கடந்து வந்துவிடும் என்றார். அனைத்துலகச் சிக்கல்களைச் சந்திக்கும்போது இந்திய மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் அணுகுமுறையே இப்போதும் பின்பற்றப்படும் என்று திரு மோடி சொன்னார்.

வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார் அவர்.

இந்நிலையில் இந்தியாவின் Adani Total Gas நிறுவனம் தொழிற்பேட்டைகளுக்கான எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாய்க் கூறியுள்ளது.

மத்திய கிழக்குப் போரால் தங்கள் நிறுவனத்துக்கு விநியோகிக்கப்படும் எரிசக்தியில் ஒரு பகுதி நிறுத்தப்பட்டுள்ளதாய் அது சொன்னது.

அதானி குழுமமும் பிரான்சின் TotalEnergies நிறுவனமும் இணைந்து தொடங்கிய விநியோக நிறுவனம் Adani Total Gas.

தொழிற்பேட்டைகள், வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு இயற்கை எரிவாயு விநியோகிக்கும் முக்கிய நிறுவனமாக அது இருந்துவருகிறது.

விநியோகத்தை அணுக்கமாக கவனித்து கட்டுப்படுத்தும்படி நிறுவனத்துக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்