Skip to main content
உயர்ந்துகொண்டிருந்த தங்க விலை... ஏன் திடீரென்று சரிந்தது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உயர்ந்துகொண்டிருந்த தங்க விலை... ஏன் திடீரென்று சரிந்தது?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உயர்ந்துகொண்டிருந்த தங்க விலை திடீரென்று சரிவைக் கண்டுள்ளது.

சென்ற வியாழக்கிழமைதான் அவுன்சுக்கு 5,600 டாலரை (சுமார் 7,121 வெள்ளி) எட்டியது.

அடுத்த நாள் விலை அவுன்சுக்கு 470 டாலருக்கு (சுமார் 598 வெள்ளி) விழுந்துவிட்டது.

தங்கத்தின் விலை ஏன் உயர்ந்துகொண்டிருந்தது?

பொதுவாக உலக வர்த்தகத்தில் நெருக்கடி நிலவும்போது தங்கத்தின் தேவை அதிகரிக்கும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிகளால் உலகப் பொருளாதாரம் நெருக்கடி நிலையை எட்டியது. ஈரான், வெனிசுவேலா, கிரீன்லந்து ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவு மோசமடைந்ததால் நெருக்கடி நீடித்தது.

நெருக்கடியில் தங்கம் நிலையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய முன்வந்ததால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தது.

திடீர் வீழ்ச்சி - என்ன காரணம்?

அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த தலைவராகத் திரு கெவின் வார்ஷ்ஷை (Kevin Warsh) அதிபர் டிரம்ப் நியமித்த பின்னர் வீழ்ச்சி தொடங்கியது.

அதைத் தொடர்ந்து அமெரிக்க டாலருடன் தங்க விலையை ஒப்பிடும்போது வலுவடைந்தது.

அதன் விளைவாகப் பல வெளிநாட்டு நாணயங்களின் பரிவர்த்தனை விகிதம் உயர்ந்தது. தங்கத்தின் விலை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உயர்ந்ததால் பலர் தங்கம் வாங்குவதை விரும்பவில்லை.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்