பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை - பலரும் தென் கொரியா செல்லக் காரணம்?
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Kim Hong-Ji
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சையைப் பெற விரும்பும் பலரும் தென் கொரியாவுக்குச் செல்கின்றனர்.
2024இல் மட்டும் 1.17 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் சிகிச்சை பெற அங்குச் சென்றதாக அந்நாட்டு சுகாதாரஅமைச்சு தெரிவித்தது.
அவர்களில் சுமார் 11.5 விழுக்காட்டினர் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையை நாடியதாகச் சொல்லப்பட்டது.
அதன் பின்னணி என்ன?
Bloomberg செய்தி நிறுவனம் அதற்கான சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.
💰 மலிவான விலை
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தென் கொரியாவில் குறைவான செலவில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையைப் பெற முடியும்
🏛️ அரசாங்கத்தின் ஆதரவு
அந்நாட்டு அரசாங்கம் சிறப்பு மருத்துவச் சுற்றுலா விசாவை வழங்குகிறது. பயணிகள் வரியைத் திரும்பப் பெறும் வசதியும் உண்டு.
🎦 இசைக்குழுக்கள், தொடர்கள் ஆகியவற்றின் தாக்கம்
K-Pop இசைக்கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரின் தோற்றத்தைக் கண்டு வியக்கும் ரசிகர்கள் அவர்களைப் போல அழகாகத் தோன்ற பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை அவசியம் என்று நினைக்கின்றனர்.
🗒️ வெளிப்படையான தகவல்கள்
சிகிச்சைகளின் விலை, சிறந்த சேவைக்கான இடங்கள் போன்ற தகவல்கள் எளிதாக இணையத்தில் கிடைப்பதால் திட்டமிடுவது சுலபமாகிறது.
ஆனால் சிகிச்சை பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன.
முறையான பயிற்சியும் தகுதியும் இல்லாத சில மருத்துவர்கள் இருப்பதால், உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
வாடிக்கையாளர்கள் நன்கு பரிசீலித்த பிறகு முடிவெடுப்பதே சிறந்தது என்பது நிபுணர்களின் ஆலோசனை.

ஆதாரம் : Others/Korean Times