இபோலா - உலக நோயா?
வாசிப்புநேரம் -
படம்: AFP
இபோலா (ebola) பரவல் உலகை அச்சுறுத்துகிறது.
தற்போது Bundibugyo எனும் அரிய ரக இபோலா கிருமி பரவுகிறது.
இபோலா பொதுவாக ஆப்பிரிக்காவில் பரவினாலும் தற்போது ஆசிய நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கின்றன.
இதுவரை நோய்ப்பரவலால் 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்றும் 131 பேர் மாண்டனர் என்றும் நம்பப்படுகிறது.
இபோலா எப்படிப் பரவும்?
நோய்வாய்ப்பட்டவர்களின் ரத்தம், எச்சில், வியர்வை போன்றவற்றின் மூலம் பிறருக்குக் கிருமி பரவும்.
விலங்குகளிடமிருந்தும் கிருமி பரவலாம்.
அறிகுறிகள் என்னென்ன?
நோய்வாய்ப்பட்டவர்கள் காய்ச்சல், தலைவலி, தசை வலி உள்ளிட்டவற்றால் அவதிப்படக்கூடும்.
நாளடைவில் அவர்களது உடலுறுப்புகள் செயலிழக்கலாம்.
நோய்த்தொற்றின் அறிகுறி தெரிய 21 நாள் வரை பிடிக்கலாம்.
நோய்வாய்ப்பட்டவர்களில் 30 முதல் 40 விழுக்காட்டினர் மரணமடையலாம்.
தீர்வு?
இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே Bundibugyo ரக இபோலா பரவியது.
எனவே நோய்ப்பரவலைச் சமாளிக்க மருத்துவர்களுக்கு உரிய அனுபவம் இல்லை என்று நிபுணர்கள் CNAஇடம் கூறினர்.
நோயைக் குணப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ மருந்தோ இல்லை.
நோய்ப்பரலைக் கண்டறிவதும் எளிதல்ல.
Bundibugyo ரக இபோலா கிருமியைக் கண்டறிய தகுந்த சோதனை முறை இல்லை.
அடுத்து என்ன?
இபோலா பரவல் உலகளாவிய சுகாதார நெருக்கடி என்று உலகச் சுகாதார நிறுவனம் மே 16ஆம் தேதி அறிவித்தது.
கோவிட்-19 போன்று இபோலா பரவல் உலகப் பெருந்தொற்றாக உருவெடுக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனினும் நிதியுதவி பெற்று தயார்நிலையில் இருக்க உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பு உதவும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : CNA