Skip to main content
தங்கத்தின் விலை ஏன் அதிகரிக்கிறது? இன்னும் அதிகரிக்குமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தங்கத்தின் விலை ஏன் அதிகரிக்கிறது? இன்னும் அதிகரிக்குமா?

வாசிப்புநேரம் -
தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஓர் அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) - சுமார் 4,002டாலர் (சுமார் 5,186 வெள்ளி)

சென்ற வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 3,860 டாலராக (சுமார் 4,980 வெள்ளி) இருந்தது.

ஒரு வாரத்தில் ஏறத்தாழ 200 வெள்ளி அதிகரிப்பு...

இந்த ஆண்டு (2025) தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 50 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.

அதிலும் சென்ற மாதம் (செப்டம்பர்) மட்டும் தங்கத்தின் விலை 12 விழுக்காடு கூடியது.

காரணம்?

பொதுவாகவே தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.

இக்கட்டான காலக்கட்டங்களில் பணத்தைப் பணமாக வைத்திருப்பதற்குப் பதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதுண்டு.

பணத்தின் மதிப்பு பாதிக்கப்படலாம்... ஆனால் தங்கத்தின் மதிப்பு கூடிக்கொண்டே தான் செல்லும் என்று நம்பிக்கை என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

- ரஷ்யா- உக்ரேன் போர், இஸ்ரேல் - காஸா போர் போன்ற உலகளாவிய அரசியல் நெருக்கடிகள், அவை முடிவுக்கு வராமல் தொடர்வது...

- அமெரிக்க அரசாங்க முடக்கம்

- அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றங்கள்

- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உலகளாவிய வரிகள்

ஆகியவற்றால் உலகளவில் பொருளாதாரப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதனால் தங்க முதலீடு உயர்கிறது.

தங்கம் வாங்குவது யார்?

நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்திருப்பதாக உலகத் தங்க அமைப்பு கூறியது.

பங்குச் சந்தைகளிலும் தங்கத்திற்கான தேவை வலுவாக உள்ளது.

விலை உயர்வால் தங்க நகைகளுக்கான தேவை குறைந்திருப்பதாக அமைப்பு சொன்னது.

Bitcoin விலையும் அதிகரிக்கிறது

தங்கத்தின் விலை மட்டும் புதிய உச்சத்தைத் தொடவில்லை... Bitcoinஇன் விலையும் இதுவரை இல்லாத அளவு உயர்கிறது.

முதல்முறையாக ஒரு Bitcoinஇன் மதிப்பு 126,000 டாலரைத் (163,200 வெள்ளி) தாண்டியது.

தங்கம் Bitcoin விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று சில கவனிப்பாளர்களும், அவை உச்சத்தைத் தொடுகின்றன, இனி குறையும் என்று சில கவனிப்பாளர்களும் கூறுகின்றனர்.

என்ன நடக்கும்?
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்