Skip to main content
தென்கிழக்காசியாவில் புகைமூட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென்கிழக்காசியாவில் புகைமூட்டம் - ஏன் இந்த ஆண்டு மோசமானது?

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியாவில் புகைமூட்டம் - ஏன் இந்த ஆண்டு மோசமானது?

படம்: CNA/Raydza Rahman

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 16 Oct 2026 08:35PM புதுப்பிப்பு : 16 Oct 2026 08:43PM
இந்தோனேசியாவில் பல மாதங்களாக நீடிக்கும் காட்டுத்தீயால் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் சிங்கப்பூரும் மலேசியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

காரணம்?

இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ தீவுகளில் காடுகளிலும் நிலத்திலும் பற்றியெரியும் நெருப்பு உண்டாக்கும் புகையே அதற்கு முக்கியக் காரணம்.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான வறண்ட பருவத்தில் அந்தப் பகுதிகளில் தீ மூளும் அபாயம் அதிகம்.

இம்முறை கடுமையான ‘சூப்பர் எல் நினோ’ பருவநிலையும் கூடுதல் வெப்பத்தையும் வறட்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதனால் காட்டுத்தீ வேகமாகப் பரவுகிறது.

எவ்வளவு நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது?

சுற்றுச்சூழல் அமைப்பான Auriga-வின் கணக்குப்படி, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 637,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயால் பாதிக்கப்பட்டுள்ளது.

அது சிங்கப்பூரின் பரப்பளவைப் போன்று சுமார் ஒன்பது மடங்கு.

புகைமூட்டம் எந்த அளவுக்குக் கடுமையாக உள்ளது?

கடந்த ஒரு மாதமாக உலகிலேயே காட்டுத்தீயால் அதிகமான புகை வெளியேற்றம் இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் (14 அக்டோபர்) ஒரு மணி நேர PM2.5 அளவு 284 வரை உயர்ந்தது.

இவ்வாண்டில் முதல்முறையாக அது ‘மிக அதிகம்’ என்ற நிலையை எட்டியது.

இந்தோனேசியாவின் ஏழு மாநிலங்களில் மட்டும், காட்டுத்தீயுடன் தொடர்புடைய சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அக்டோபர் 13ஆம் தேதி நிலவரப்படி 283,000-ஐத் தாண்டியுள்ளது.

பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் சுமார் 2,000 விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்