Skip to main content
இந்தியாவில் பொருள் சேவை வரியில் ஏன் அவ்வளவு பெரிய மாற்றம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் பொருள் சேவை வரியில் ஏன் அவ்வளவு பெரிய மாற்றம்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவில் இன்றுமுதல் பொருள் சேவை வரி கணிசமாகக் குறைக்கப்படுகிறது. 

ஏன் அவ்வளவு பெரிய மாற்றம்?

வாழ்வாதாரத்தை மேம்படுத்த

Related article image
AFP

சிறிய கார்கள்..தொலைக்காட்சி...குளிர்பதனப் பெட்டி ஆகியவற்றுக்கான வரி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படுகிறது.

சவர்க்காரம், தலைமுடி எண்ணெய் போன்ற பொருள்களுக்கான வரி 12 அல்லது 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படுகிறது.

பொருள்களின் விலை குறைந்தால் மக்கள் அதிகம் செலவழிப்பார்கள்... 

குறிப்பாக நடுத்தர வருமானம் ஈட்டுவோரின் பொருள் வாங்கும் ஆற்றல் கூடும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 60 விழுக்காடு...மக்களின் செலவினத்தால் வருகிறது.

இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஐந்தாண்டு காணாத அளவு மந்தமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் செலவினம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்கா விதித்த வரிக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள

அமெரிக்கா, இந்தியப் பொருள்கள் மீது 50 விழுக்காட்டு வரி விதித்துள்ளது. 

Related article image
Manan Vatsyayana / AFP

இந்நிலையில் வெளிநாட்டுப் பொருள்களை விட்டுவிட்டு உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி இந்திய அரசாங்கம் வலியுறுத்துகிறது.

பொருளாதாரம் மேம்பட்டால் அமெரிக்க வரியின் தாக்கத்தைக் குறைக்கமுடியும் என்று கருதப்படுகிறது.

வரிச் செயல்முறையை எளிமைப்படுத்த

இந்தியாவில் வரிச் செயல்முறை முன்னர் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

அதில் நிறைய நிபந்தனைகளும் விதிவிலக்குகளும் இருப்பதாக விமர்சகர்கள் பல ஆண்டுகளாகக் கூறினர்.

அவற்றைச் சீராக்க இப்போது மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்